கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Mahendran

வியாழன், 10 ஏப்ரல் 2025 (14:22 IST)
கவர்னருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்'' என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
கவர்னருக்கு எதிராக அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும். பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் சிறந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளதை அனைவரும் அறிவோம்.
 
மாநில உரிமைக்கான தி.மு.க., அரசின் தொடர் சட்டப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியமான வெற்றி என்பதால், தங்கள் மாநிலங்களில் கவர்னரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிற அரசுகளும், தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து தங்களின் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
 
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.க, நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழகத்தின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
 
கவர்னரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி. இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காக்க தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்