திமுக கூட்டணி எப்போது இறுதிவடிவம் ? திருமாவளவன் பதில்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (10:36 IST)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் 'கனவுகளுடன் மலுக்கட்டும் கலைஞன்'  என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
 
இப்புத்தகதைப் பற்றி பேசிய அவர். பரியேறும் பெருமாள் படத்தை பார்க்கிற போது , என்க்கு மனநிறைவு ஏற்பட்டது ஆனால் மன எழுச்சி ஏற்படவில்லை. கதாநாயகனின் தந்தையை ஆண்மை இல்லாதவர் என்று சொல்லி வேட்டி இல்லாமல் துரத்தியதற்கு பதிலாக வேறு மாதிரி காட்சிப்படுத்தியிருக்கலாம். இப்படத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை கூறியதால் இப்படத்தை பாராட்டுகிறேன்.
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடனான கூட்டணி குறித்து இன்று பேச்சு வார்த்தை நடக்கும் என்றார். மேலும் இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணி இறுதிவடிவம் பெற்றுவிடும். ஐஜேகே கூட்டணி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதை விசிக வரவேற்பதாகக் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்