மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த் - அதிர்ச்சியில் தொண்டர்கள்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (13:05 IST)
உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் தற்பொழுது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு பின் திரும்பி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேரிடையாக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் நடக்க முடியாமல், சுற்றி நடப்பதை உணரமுடியாமல் நின்ற விதம் அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
வீடு திரும்பிய விஜயகாந்திற்கு கடந்த ஆகஸ்ட்30 ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
 
இந்நிலையில் தற்பொழுது உடல் நலக்குறைவால் விஜயகாந்த் மீண்டும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைக்கேட்ட அவரது தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இது வழக்கமான செக்கப் தான் என்றும் அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்