5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

Mahendran

சனி, 11 ஜனவரி 2025 (11:34 IST)
13 வயது சிறுமியை கடந்த ஐந்து ஆண்டுகளாக கிட்டத்தட்ட 60 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 13 வயது சிறுமியை உடற்கல்வி பயிற்சியாளர், பள்ளி வகுப்பு தோழர்கள் என 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நடந்த இந்த கொடூரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

பள்ளியில் நடந்த குழந்தைகள் நலக்குழுவின் ஆலோசனை நிகழ்வின்போது சிறுமை தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய போது தான் ஆலோசனை குழுவில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதை அடுத்து குழந்தைகள் நலக்குழு சார்பில் காவல் துறையில் புகார்  வழங்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்  உடற்கல்வி பயிற்சியாளர் பள்ளி வகுப்பு தோழர்கள் என 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விளையாட்டு வீராங்கனையான அந்த சிறுமியை விளையாட்டு முகாம்களில் உள்ள பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேரின் மொபைல் எண்களை தனது தந்தையின் மொபைல் போனில் சிறுமி பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்