19 ஆண்டுகளுக்குப் பிறகு வாடகை வீட்டை ஒப்படைத்தாரா சீமான்?

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (12:43 IST)
19 ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய மறுத்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது வீட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீமான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் ஒரு இயக்குனரோடு அவர் வாடகைக்கு இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். காலவோட்டத்தில் அந்த இயக்குனர் அந்த வீட்டை காலி செய்துவிட்டு சென்றபோது சீமான் அந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சீமானுக்கும் அந்த வீட்டின் உரிமையாளருக்கும் வீட்டு வாடகை நிர்ணயம் செய்வதில் பிரச்சனை எழுந்தது. இதனையடுத்து வீட்டைக் காலி செய்ய சொல்லி வீட்டு உரிமையாளர் சீமானிடம் கூறியுள்ளார். சீமான் அதை மறுக்கவே பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

தீர்ப்பு உரிமையாளருக்கே சாதகமாக வந்தாலும்  வீட்டைக் காலி செய்யாமல் இழுத்தடித்து வந்த சீமான் இன்று நீதிமன்றத்தில் வீட்டின் சாவியை ஒப்படைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டின் உரிமையாளர் இன்று தனது வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்