கடந்த டிசம்பர் 26ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹7,125 என்று இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ₹7,285 வரை விற்பனையானது. ஆனால், இன்று திடீரென ஒரு கிராமுக்கு ₹30 உயர்ந்து 7,315 ஆக விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கம் ₹58,280 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹240 குறைந்து ₹558,520 என விற்பனையாகியுள்ளது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹7,980 என்றும், எட்டு கிராம் ₹63,840 என்றும் விற்பனையாகி வருகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹101 என விற்பனையான நிலையில், இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிலோ ₹101,000 என்றும் விற்பனையாகி வருகிறது.