அப்ப எல்லாம் பொய்யா? - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா?

ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (12:07 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

 
2015ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதுபற்றி உறுதியான எந்த தகவலையும் மத்திய அரசு கூறவில்லை. கடந்த ஜூன் 2ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறினார். அதேபோல், மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் இதை உறுதி செய்தார்.
 
ஆனால், மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் இதுபற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை நிதியும் ஒதுக்கப்படவில்லை, எந்த நிறுவனத்திற்கும் டெண்டரும் விடவில்லை என பதிலளித்துள்ளது.
 
தமிழக அமைச்சர்கள் அனைவரும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தொடர்ந்து கூறிகொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்