எண்ணி 15 நாட்களில் விடுதலையாகும் சசிகலா!!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:58 IST)
சசிகலா இன்னும் 15 நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்து விடுவார் என்று அமமுக பொருளாளர் வெற்றிவேல் தகவல். 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென டிடிவி தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   
 
சசிகலா விடுதலை குறித்தும், பாஜகவுடன் அமமுக கூட்டணி நடத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அவர் டெல்லி சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன.    
 
ஆனால், டெல்லி சென்று திரும்பிய அவர், டெல்லி சென்றது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும் அரசியல் குறித்து எதுவும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் அவர் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது.  
 
இந்நிலையில், பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமமுக பொருளாளர் வெற்றிவேல், சசிகலா இன்னும் 15 நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்து விடுவார் என்று தெரிவித்துள்ளார். 
 
அதாவது கர்நாடக சிறை விதிகளின்படி, செப்டம்பர் இறுதியில் சசிகலா வெளியே வந்தாக வேண்டும். இதில் வேறு யாரும் உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்