பாஜக யாருக்கும் மத்யஸ்தம் செய்யவில்லை... முருகன் சுளீர்!

புதன், 23 செப்டம்பர் 2020 (18:21 IST)
அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முற்பட்டுள்ளது என்பதற்கு  தற்போது விளக்கம் அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் திடிர் பயணமாக டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சசிகலா விடுதலை குறித்த வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டிருப்பதாக ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் பாஜகவோடு டிடிவி கூட்டணி வைக்க பேசி வருவதாகவும் பேசப்பட்டு வந்தது. 
 
இதனால் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருப்பதாகவும், எனினும் இதுகுறித்து சசிகலா வெளியான பின்பே தெரிய வரும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இதில் உச்சகட்டமாக அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். அவர் கூறியதாவது, 
 
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மத்தியஸ்தம் ஏதும் பாஜக செய்யவில்லை. இதுபோன்ற தேவையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்