தற்போது ட்ரெண்டாக இருந்து வரும் கிப்ளி ஆர்ட் ஸ்டைலில் தனது புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஜப்பான் அனிமே ஸ்டுடியோவான GHIBLI கிப்ளியின் ஓவிய பாணி தனித்துவமானதாகும். சமீபமாக சாட்ஜிபிடி அறிமுகப்படுத்திய வசதியின் மூலம் அனைவரும் தங்களது புகைப்படங்களை கிப்ளி ஸ்டைலில் மாற்றி சோசியல் மீடியாவில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக இருந்தபோது மக்களை சந்தித்த சில தருணங்களை கிப்ளி ஆர்ட்டாக செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “#தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து #ஸ்டுடியோகிப்லி உலகம் வரை —
எனது மிகவும் மறக்கமுடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது கிப்ளி ஸ்டைல் ஓவியங்கள் வைரலாகி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த புகைப்படங்களை அதிமுகவினர் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Edit by Prasanth.K