சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென டிடிவி தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், டெல்லி சென்று திரும்பிய அவர், டெல்லி சென்றது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும் அரசியல் குறித்து எதுவும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் அவர் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில், சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை மீட்கும் பணிகளை தொடங்குவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டியளித்துள்ளார். எனவே கட்சி அதிகாரம் சசிகலாவிற்கு ஆட்சி அதிகரம் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பிற்கும் செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.