விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளராக இருக்கும் ஒருவர் கள்ள நோட்டு அடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வம், தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து, அதில் கள்ள நோட்டு அச்சடித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், போலீசார் நடத்திய சோதனையில் ஆயிரக்கணக்கான மதிப்புள்ள கள்ள நோட்டுகள், வாக்கி-டாக்கி பிரின்டிங் மெஷின் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.