ஆளுனர் ரவி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (08:34 IST)
தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது குறித்து ஆளுநர் மற்றும் முதல்வர் நேரில் சந்தித்து கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. 
 
அதன் அடிப்படையில் நேற்று ஆளுநர் ரவியை முதலில் ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முதல்வர் ஒரு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள், கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் நலன் கருதி விரைந்து தீர்வு கிடைக்க ஆளுநர் வழிவகை செய்ய வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. 
 
மேலும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 முக்கிய மசோதாக்களை திரும்ப பெற்று ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதற்கு ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்