வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?

Mahendran

செவ்வாய், 26 நவம்பர் 2024 (13:59 IST)
வங்கக்கடலில் நாளை புயல் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ள வானிலை ஆய்வு மையம், அந்த புயலுக்கான பெயரையும் வெளியிட்டுள்ளது. 
 
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தற்போது, 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், நவம்பர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும், அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை நெருங்கி, பின்னர் இரண்டு நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ’ஃபெங்கல்’என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்