மும்பை-புனே விரைவு சாலைக்கு அருகிலுள்ள பகுதியில், பெண்ணின் உடலை அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் உடனே காவல்துறையிடம் தகவல் வழங்கினர். தகவலின் அடிப்படையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாக்குப் பையில் இருந்த பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உடலின் நிலையை அடிப்படையாக கொண்டு, கொலை இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் யூகிக்கின்றனர். இறந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறியும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து சாக்குப் பையில் போட்டு, அந்த பகுதியில் தூக்கி எறிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.