அடுத்த தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், சில முட்டாள்கள் இன்னும் போர் விமானங்களை தயாரித்து கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்கா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அரசில் ஆலோசனை வழங்கும் செயல்திறன் துறையின் இணை தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் போர் விமானங்களை ஆளில்லா விமானங்களாக மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
"முட்டாள்கள் தான் மனிதர்களை ஏற்றுச் செல்லும் போர் விமானங்களை இன்னும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்," என்று அவர் குற்றம் சாட்டினார். நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடும் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "எதிர்காலத்தில் ஆளில்லா விமானங்களே முக்கியமாக பயன்படும்," என்றும் அவர் கூறினார்.