அன்பில் மகேஷை திகைக்க வைத்த 5 ஆம் வகுப்பு மாணவி

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (09:25 IST)
மதுரையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் திருக்குறளை ஒப்புவித்து அசத்திய 5ம் வகுப்பு மாணவியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதனிடையே உமைச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்த சென்றபோது அமைச்சரை வரவேற்ற வீரபாண்டி அரசு பள்ளியை சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி  பவித்ரா அமைச்சர் முன்னிலையில் சரளமாக திருக்குறளை ஒப்புவித்து சாமர்த்தியமாக செய்கையுடன் கூடிய விளக்கத்தையும் அளித்தார். 
 
இதனை கண்டு வியந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மாணவியை பாராட்டி இந்தியா 2020 என்ற அப்துல்கலாம் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார். மாணவி பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்