மதுரை பாண்டிகோவில் அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த் - தாமரைசெல்வி தம்பதியினரின் மூத்த மகளான அபிநயா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் மூலமாக படித்துகொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் மாணவியின் விருப்பமின்றி தாய் மாமனுடன் திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து மாணவி தனக்கு விருப்பமின்றி திருமணம் முயற்சிகள் நடைபெறுவதாகவும், தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல்துறை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூற அனுப்பிவைத்துள்ளனர். மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மனநல ஆலோசனை வழங்கிய நிலையில் உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று தனது வீட்டிற்கு மாணவி திரும்பிய நிலையில் திடிரென அவரது அறை திறக்கப்படாத நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றநிலையில் மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு உடலை வீட்டிற்கு எடுத்துசென்ற நிலையில் போலிசார் உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.