சென்னையில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு!

செவ்வாய், 15 ஜூன் 2021 (12:39 IST)
ஊரடங்கு நேரத்தில் போதுமான ரயில் பயணிகள் இல்லாத காரணத்தினால் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயில்களும் உண்டு என்றும் தென்னக ரயில்வே சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
 
* சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் ஜூன் 18, 20, 25, 26 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது
 
* மதுரை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது 
 
* புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது 
 
* கன்னியாகுமரி புதுச்சேரி சிறப்பு ரயில் ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது 
 
* சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது 
 
* தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது 
 
* சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது 
 
* மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை ரத்து 
 
* சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது 
 
* திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது 
 
* சென்னை சென்ட்ரல் - மன்னார்குடி சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது 
 
* மன்னார்குடி சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்