ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Siva

வியாழன், 9 ஜனவரி 2025 (17:42 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏற்கனவே அதிமுக போட்டியிடவில்லை என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் போட்டி இல்லை என்று கூறப்படும் நிலையில் பாஜகவும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே திமுகவுடன் நாம் தமிழர் கட்சி மட்டுமே ஈரோடு கிழக்கு தொகுதியில் மோதும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் இன்று நேற்று கூடிய நிலையில் இதில் அண்ணாமலை உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அண்ணாமலை கூறி இருப்பதாகவும், அதனை மற்ற பாஜக நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, ஈரோடு கிழக்கு தொகுதியை  கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்று ஒரு சில பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் கூட்டணி கட்சியான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட விருப்பமில்லை என்று கூறப்படுவதால், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் மட்டுமே நேருக்கு நேர் மோதும் என்று கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்