இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கும் டோக்கனில் எப்போது பொருள் வாங்க வேண்டும் என்று நேரம், தேதி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த தேதியில் சென்று பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள், மாதத்திற்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளும், இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.