8 கடைகளில் தொடர் திருட்டு: 4 பேர் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை.

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (10:36 IST)
கோவை பாலக்காடு சாலை கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் கடந்த 20 ம் தேதி 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் சுமார் 80 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கபட்டது. 
 
இதே போல் வேலந்தாவலம் சாலை பிச்சனூர் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரன் தனது குடும்பத்துடன் ஈரோடு சென்று உள்ளார் அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன்  தங்க நகைகளை கொள்ளை அடிக்கபட்டது. 
 
இந்நிலையில் ஒரே நாளில் நடந்த இச்சம்பவங்கள் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தபட்டது. அப்போது இந்த இருவேறு சம்பவங்களிலும் கிடைத்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த நான்கு நபர்களை இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 
 
இதனையடுத்து இவ்வழக்கில் ராஜா 37, பாரதிசெல்வம் 22, பாலகிருஷ்ணன் 35 மற்றும் ரங்கராஜன் 32 என 4 பேர் கைது செய்யபட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்களை கைப்பற்றியதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்