பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறை தலைவர் பதவி கொடுக்கப்பட்டதை அடுத்து அந்த பதவியில் இருந்த கே எஸ் அழகிரியின் ஆதரவாளர் கோபண்ணா பதவி இழந்துள்ளார்.
கோபண்ணா பதவி இழந்து உள்ளதால் கேஎஸ் அழ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு இணையாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி துறை செயல்படவில்லை என செல்லப் பெருந்தகை தான் காங்கிரஸ் தலைமையிடம் போட்டுக் கொடுத்ததாகவும் இதனை அடுத்து கோபண்ணா கழட்டி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த பொறுப்புக்கு யாரை நியமனம் செய்யலாம் என்று பேச்சு வார்த்தை நடந்தபோது ஆனந்த் சீனிவாசன் பெயரை செல்வப் பெருந்தகை பரிந்துரை செய்ததாகவும் ஏற்கனவே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஆனந்த் சீனிவாசனுக்கு நல்ல பெயர் என்பதால் உடனே அவரது பெயரை டிக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது
தனக்கு பதவி போனது போல் தன்னுடைய ஆதரவாளர் கோபண்ணா பதவி போகவும் செல்வப்பெருந்தகை தான் காரணம் என்பதை அறிந்து கேஸ் அழகிரி அதிருப்தியின் உச்சத்துக்கே சென்று விட்டதாக கூறப்படுகிறது