கடந்த 2023 ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்டது என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயண்ம இன்று திருப்பூரில் நிறைவடைந்தது.
இந்த நடைபயணத்தின் நிறைவு விழாவாகவும், மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் பிரசார தொடக்கமாகவும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றுள்ளனர்.