பாஜகவில் சேர்வதாக வெளியான தகவல்....Dont Care னு விட்டுட்டுப் போயிடனும்-S.P.வேலுமணி.

Sinoj

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (19:04 IST)
3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில்   நான் சேருவதாக  சொல்கிறார்கள் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
 
இந்த நிலையில், சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக அறிவித்தது.
 
இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்து தன் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில், மேலும் அதிமுகவில் இருந்து 2 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது.
 
இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரும் அடிபட்டது.
 
இதுகுறித்து அவர் பேசியதாவாது: 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில்   நான் சேருவதாக  சொல்கிறார்கள்.  இதுக்குப்போய் நான் பதில் சொல்லனுமா? Dont Care னு விட்டுட்டுப் போயிடனும். திமுக- அதிமுக கூட்டணி சேருமா? பாஜக- காங்கிரஸ் கூட்டணி சேருமா? அதுபோலத்தான் அதிமுக தாய் கட்சி இங்குதான் வந்து சேர்வார்கள் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்