தினகரன் நடவடிக்கைகள் மீதான அதிருப்தியை முக்கிய நிர்வாகிகள் சசிகலாவிடம் தெரிவித்ததால் அவர் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் ஆகிறது.
சசிகலாவை அவ்வப்போது டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் சந்தித்துவிட்டு வருவார். கடைசி முறை தினகரன் சசிகலாவை சந்திக்க சென்ற போது, அவரை சந்திக்க சசிகலா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் சந்தித்து கட்சியின் தினகரன் மேல் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தினராம். கட்சி பணிகள் அனைத்து முடங்கிபோய் உள்ளது. உங்களுக்காகவே நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என தெரிவித்தனராம்.
இவை அனைத்தையும் பொருமையாக கேட்டுக்கொண்ட சசிகலா விரைவில் தனக்கு விடுதலை கிடைக்கும் எனவும், நான் வந்த பின்னர் கட்சியின் நிலைமை மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தாராம்.