டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதோடு அவர் கட்சி தாவ உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், கட்சி தாவும் எண்ணம் தற்போது இல்லை. சசிகலா வந்தவுடன் நிலைமை அனைத்தும் மாறும், மாற்றம் வரும் என புகழேந்த்தி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.
அதோடு, தினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை. கட்சியில் இருக்கும் கொஞ்சம் பேரையும் இழந்து விடக்கூடாது. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் விரலைக்கொண்டு அவர்களது கண்ணையே குத்திக்கொண்டு உள்ளனர். என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்குதான் பேரிழப்பு என தெரிவித்திருந்தார்.