சசிகலா வரட்டும்; கட்சி தாவும் ப்ளான் இப்போ இல்ல... புகழேந்தி!!

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (11:16 IST)
புகழேந்தி கட்சி மாறுவார் என கூறப்பட்ட நிலையில் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை என தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவிற்கு போட்டியாக பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தனது செல்வாக்கை கோட்டைவிட்டார். தேர்தல் சரிவிற்கு பின்னர் தங்கத் தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர் கட்சி தாவினர்.   
 
இந்நிலையில் புகழேந்தியும் விரைவில் கட்சி தாவவிருப்பதாக கூறப்படுகிறது. ஆம், புகழேந்தி கட்சி தாவுவது குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
ஆனால், புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவித்த என்னை நாகரீகமற்ற முறையில் அமமுக ஐடி விங் படம் பிடித்து வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளது எனவும், இதற்கு தலைமை பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.  
 
இதனை தொடர்ந்து, அமமுக முக்கிய புள்ளி வெற்றிவேல், தினகரனை அடையாளப்படுத்தியதாக புகழேந்தி கூறுவது சரியல்ல. அவர் பேசுவதை பார்த்தால் வேறு கட்சிக்கு போவது போலதான் தெரிகிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 
இந்நிலையில் கட்சி தாவல் குறித்து புகழேந்தி பதில் அளித்தது பின்வருமாறு, வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன் தான் முடிவு செய்ய வேண்டும்.

தினகரன் என்னை போ என்றால் சசிகலா என்னை வா என்பார். சசிகலா வந்த பின்னர் நிலைமை மாறும். அனைத்திற்கும் விடை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்