காலில் விழுந்து கெஞ்சி கேட்டு கொள்கிறேன்: வாக்காளர்களிடம் சரத்குமார் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (09:20 IST)
காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக் கொள்வதாக வாக்காளர்களிடம் சரத்குமார் உருக்கமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் அவர்களும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் 
 
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது ’தயவுசெய்து ஓட்டுக்கு பணம் யாரும் வாங்க வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்
 
பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து ஒரு சில கட்சிகள் தேர்தலை சந்திப்பதாகவும், மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று கெஞ்சி கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாதி மத பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதே தனது கட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்