இனி கணவருடன் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்- ராதிகா சரத்குமார்!

வியாழன், 28 ஜனவரி 2021 (18:49 IST)
பிரபல நடிகர் சரத்குமார் தனது கட்சியை நிர்வகித்துக் கொண்டே ஒருபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். அவரது மனைவி ராதிகா டிவி சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ராதிகா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, இனி சின்னத்திரையில் இருந்து படிப்படியாக தான் விலகப் போவதாக அறிவித்துள்ள ராதிகா அவரது கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்