சினிமாவில் தொடர்ந்து நடித்திருந்தால்.... இன்று நான் தான் சூப்பர் ஸ்டார் - சரத்குமார்

சனி, 30 ஜனவரி 2021 (16:54 IST)
நான் தொடர்ந்து நடித்திருந்தால் இன்று நான் தான் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பேன் என சமக கட்சித்தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தின் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

நடிகர் சரத்குமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் சினிமாவில் நடித்துவருகிறார். அரசியல் மற்றும் சினிமா ஆகிய இருதுறைகளிலும் அவர் கால்பதித்துள்ளார்.

இந்நிலையில், கட்சி தொடங்கிய எல்லோருக்குமே இருக்கும் ஆசையை அவர் சமீபத்தில் வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியிருந்ததாவது :

நான் முதலமைச்சராக அமரவேண்டுமென ஆசைப்படுகிறேன். இதுகுறித்து பலமுறை கூறியுள்ளேன்.

நான் எனது 80 வயதில் அல்லது 90 வயதில் முதல்வராக ஆகலாம் அல்லது பிரதமராகலாம் என்று கூறிய அவர் வயது என்பது எண் தான் எனத் தெரிவித்தார்.

தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வரும் தேர்தலிலும் இதே கூட்டணியில்தான் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் சரத்குமார், நான் தொடர்ந்து நடித்திருந்தால் இன்று நான் தான் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பேன். அதிமுக , திமுகவுக்கு அதிகம் உழைத்திருக்கிறேன். அதிமுகவின் மூத்த உறுப்பினர் நான் என்று கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமார் ஹிந்தியில் அமிதாப் பச்சம் தொகுத்து வழங்கும் குரோர்பதி நிகழ்ச்சியை தமிழில் கோடீஸ்வரன் என்ற பெயரில் தொகுத்து வழங்கினார் என்பது

மேலும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் ‘’இனிமேல் சின்னத்திரையில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு, என் கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்