ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வங்கி கணக்கு முடக்கம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (08:42 IST)
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வங்கி கணக்கு முடக்கம்!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்ததில் கிலோ கணக்கில் தங்கம் லட்சக்கணக்கில் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமாரின் வங்கி கணக்குகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதாகவும் தகவல் இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் சமீபத்தில் நடந்த சோதனையில் இருபத்தி 23.5 லட்ச ரூபாய் ரொக்கம் 193 பவுன் சவரன் நகைகள் மற்றும் இரண்டு கிலோவுக்கும் அதிகமான வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அவருடைய வங்கி லாக்கரையும் சோதனை செய்ய வருமானவரித் துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்