ஹேக் செய்யப்பட்ட நடிகர் பார்த்திபனின் முகநூல் கணக்கு!

புதன், 24 நவம்பர் 2021 (10:06 IST)
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கம் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அதிலும் முகநூலில் ரசிகர்களின் குறும்பான கமெண்ட்களுக்கு அவரும் குறும்பாகவே பதிலளிப்பார். இந்நிலையில் அவரின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அவர் ‘என் FB hack செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம், ஆனால் அறிவுக்கே பிறந்த சில sweet enemies Hack செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்’ எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்