தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படுகொலை மற்றும் பிற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக என்கவுண்டர் ஆயுதத்தை போலீசார் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரையில் ரிங் ரோட்டில் நடைபெற்ற என்கவுண்டரில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானுள்ளன. மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் 22ஆம் தேதி கிளாமர் காளி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என தகவல் கிடைத்துள்ளது. இந்த கொலை வழக்கில் 7 பேர், உட்பட ஜெயக்கொடி, கார்த்திக் ஆகியோர் போலீசாரின் தனிப்படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கொலை தொடர்பான விசாரணையில், என்கவுண்டர் செய்யப்பட்ட நபருக்கு பல்வேறு குற்றவழக்குகள் இருந்தன என்றும், மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கியவரை போலீசாரை தாக்க முயற்சித்தபோது அவரை சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் தற்போது உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.