செப். மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

செவ்வாய், 2 நவம்பர் 2021 (12:30 IST)
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. அதன்படி சமூக வலைதளங்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை தாங்கள் பெற்ற புகார்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
 
இந்நிலையில் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூலை மாதத்தில் 20,11,000 கணக்குகளும் ஆகஸ்ட் மாத்தில் 30,27,000 கணக்குகளும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
செப்டம்பர் மாதத்தில் 560 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், முடக்கப்பட்ட கணக்குகளில் 95 சதவிகிதம் போலியானது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்