பொங்கல் தொகுப்பு ரூ.1000 எப்போது? முதல்வர் முக்கிய ஆலோசனை!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (12:54 IST)
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பொருள்கள் மற்றும் ரூபாய் 1000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதுகுறித்து இன்று ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டன என்பதும் அந்த தொகுப்பு பொருள்களில் இருந்த ஒருசில பொருள்களும் தரமற்றதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1000 பணமும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்று உள்ளதாகவும் இதில் பொங்கல் பரிசு தொகுப்பு என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
மேலும் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்