நாக்பூரில் உள்ள இமாம்வாடா காவல் நிலையத்தில் 28 வயதுடைய ஒரு பெண் மருத்துவர், கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “2022ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் வாயிலாக எனக்கும் அந்த ஐபிஎஸ் அதிகாரிக்கும் நட்பு ஏற்பட்டது. அவர் அப்போது யுபிஎஸ்சி தேர்விற்கான தயாரிப்பில் இருந்தார்; அதே சமயம் நான் எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்துக்கொண்டு இருந்தேன்.
இதன் பின்னர், இருவருக்கும் இடையிலான ஆன்லைன் உரையாடல்கள், தொலைபேசி அழைப்புகளாக மாறியதுடன், இருவரும் நெருங்கிய உறவில் ஈடுபட்டனர். அதற்குப் பின்னர், “நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதனை நம்பித்தான் உறவில் ஈடுபட்டேன்.
ஆனால், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன் அவர் தன்னிடமிருந்து விலகத் தொடங்கினார். திருமணம் குறித்த உரையாடல்களைத் தவிர்த்து வந்ததோடு, அவரது குடும்பத்தினரும் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய அதிகாரிக்கெதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் ஏமாற்றம் குறித்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.