அர்ஜெண்டினா வெற்றி: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திங்கள், 19 டிசம்பர் 2022 (07:49 IST)
உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதை அடுத்து அந்த அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
முப்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி தனது வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் இது மிகவும் விறுவிறுப்பான ஆட்டமாக என்றும் நினைவில் இருக்கும் என்றும் இந்த வெற்றியால் இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான மெஸ்ஸி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் உலக கோப்பை கால்பந்து போட்டியை வென்ற அர்ஜென்டினா அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலக கோப்பை கால்பந்து வென்ற அர்ஜென்டினா அணிக்கும் குறிப்பாக மெஸ்ஸிக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் கோல்கீப்பர் மார்டினெஸ்க்கு எனது சிறப்பு பாராட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்