திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (20:59 IST)
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் தவறு செய்யும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் ராசிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பங்காரு என்பவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் முறையாக அனுமதி பெறாமல் மரங்களை வெட்டி குறைந்த விலைக்கு விற்பதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்