பேருந்து கட்டண உயர்வால் மக்களுக்கு பட்டை நாமமா?- ஒரு சாமானியனின் குரல்

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (17:18 IST)
ஒரு  கொடூரக்  கொள்ளைக்காரனிடம், இருக்கும் நூறில் ஒரு பங்கு கூட இரக்கம் இல்லாததுதான் இந்த அரசு. இந்த ஆட்சி முழுவதுமே சொல்ல முடியாத வேதனைகளே. 


அதிலும் இந்த போக்குவரத்து கட்டண உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதித்து வருகிறது.
ஒவ்வொரு பயணத்தின்  போதும் சில பத்துகள் முதல் சில நுறுக்கள் வரை வரிய எளிய மக்களின் சட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுக்கும் ஒரு அரசின் கொள்கை முடிவை என்ன சொல்வது? மாய திருடர்களின் அரசு இது. முற்றிலும் திறனற்ற ஒரு அரசு தனது சுமைகளை மக்களின் தலையில் ஏற்றி வைத்து இருக்கிறது. எரிகின்ற    வீட்டில் பிடுங்கிய வரை லாபம்.  யாருக்கு என்ன வந்தால் நமக்கு என்ன?  நம் கல்லாப் பெட்டி நிரப்ப வேண்டும் என்ற நினைப்புதான் இந்த அரசுக்கு!
 
அறிவாற்றலால் மக்களை கொள்ளை அடிப்பதற்கு பெயர் தான் ஜன நாயகமோ?  மீண்டும் எழவே முடியாத ஒரு அரசின் முதல்வர், மக்களை சந்திக்கவே மாட்டோம் என்ற தைரியத்தில் தான்  இதை செய்து இருக்கிறார். 
 
கட்டண உயர்வு கசப்பு மருந்துதான். ஆனால் அதை தருவது கசாப்புக்காரான். பேருந்து மக்கள் உடையதுதான், அதை மக்கள் தான் சரி செய்ய வேண்டும் என்கிறார் முதலமைச்சர். 

 
அரசு மக்கள் உடையதுதான். இந்த அரசின் எஜமானர்கள் மக்கள். இந்த அரசின் லாபத்தில் மக்களுக்கு பங்கு உண்டா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!? உண்மையில் இங்கு நடப்பது மக்கள் நல அரசு அல்ல . 
 
இல்லாத எம் ஜி ருக்கு   கோடிக்கணக்கில் செலவு செய்து விழா!
 
உழைக்காத எம் எல் ஏ.க்களுக்கு லட்சக்கணக்கில் சம்பள உயர்வு!
 
லாபம் அரசுக்கு!
 
ஆனால் மக்களுக்கு மட்டும் பட்டை நாமமா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!
 
இந்த அரசு மக்களை விட்டு நிரந்தரமாக போகலாம்!
 
எல்லா கதவுகளும் திறந்தே இருக்கிறது!
 
சிறந்த சேவையை வழங்கதான் இந்த கட்டண உயர்வு என்றால் உங்கள் சேவை தேவையில்லை.  
 
மதுரை டூ ராஜபாளையம் ஜெய விலாஸ் சர்வீஸ் ஆல் முடிவது, இந்த பழனிச்சாமி சர்வீஸ் ஆல் முடியவில்லை


 
இரா காஜா பந்தா நவாஸ்
sumai244@gmail.com

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்