மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-ல் இருந்து ரூ.5ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12-ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ வரை ரூ.17-ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், வெளியூர் செல்லும் பேருந்து கட்டணமும் இருமடங்கு உயர்ந்துள்ளதால், பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.