மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!

Siva

செவ்வாய், 11 மார்ச் 2025 (09:33 IST)
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை என மத்திய அமைச்சர் மாநிலங்களவை கூட்டத்தில் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்குவது குறித்து மாநிலங்களவை எம்பிக்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர், "2002 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் மத்திய பாஜக அரசு மெட்ரோ திட்டங்களை தொடங்கியது. தற்போது 23 நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு செயல்பாட்டில் உள்ளது. சீனா, அமெரிக்காவை அடுத்து அதைத் தொடர்ந்து இந்தியாவில் தான் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், அந்த நகரங்களுக்கான தொலைநோக்கு போக்குவரத்து திட்டம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வறிக்கையை விரிவாக மாநிலங்கள் அனுப்பினால்தான் அந்த திட்டங்கள் அங்கீகரிக்கப்படும். திட்டங்களை முறையாக ஆய்வு செய்யாமல் நாடாளுமன்றத்தில் அது குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,000 கோடி மதிப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முழுமையான திட்ட அறிக்கை வெளியாகவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்