கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் வெளியேற்றிய நிறுவனங்களுக்கு அபராதம்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (19:29 IST)
கரூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைகள் வழியாக வெளியேற்றக் கூடிய கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் வெளியேற்றிய நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு செல்லும் மழைநீர் வடிகால்களை அடைத்து, சிலாப் போட்டு, பந்தல் மற்றும் விளம்பர பதாகைகளை வைத்துள்ள நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். 
 
அப்போது மாநகர நல அலுவலர் இலட்சியவர்ணா அப்பகுதியில் செயல்படும் தனியார் உணவகங்களை ஆய்வு செய்தபோது கழிவுநீரை முறையாக பாதாள சாக்கடைகள் வழியாக வெளியேற்றாமல், மழை நீர் வடிகால்களில் வெளியேற்றியதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்