கரூர் மாநகராட்சியில் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

புதன், 30 ஆகஸ்ட் 2023 (20:50 IST)
கரூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதலாக மதிப்பீடு தொகை உள்ளது என திமுக கவுன்சிலர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர் இதனால் பரபரப்பு  ஏற்பட்டது.
 
கரூரில் இன்று நடைபெற்ற மாமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சியில் பணிகளில் அதிக அளவு மதிப்பீட்டுத் தொகையை தீர்மானத்தில் இடம் பெற்றதை எதிர்ப்பு தெரிவிக்கும் மேலும் மாநகராட்சியில் பணம் இல்லாத சூழ்நிலையில் அவுட்சோர்சிங் முறை என்ற தனியார் கம்பெனியின் மூலமாக பணியில் 1500 பேரை வேலைக்குச் சேர்த்து வருவாய் இழப்பு செய்வதை எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் எழுந்து நின்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் கடந்த கூட்டத்தில் பேப்பர் பேனா ஸ்டேஷனில் பொருட்கள் வாங்குவதற்காக 25 லட்சமும் இந்த முறையும் அதேபோன்று 25 லட்சம் மதிப்பீட்டுத் தொகை தீர்மானத்தில் இருந்ததை எதிர்ப்பு தெரிவித்து திமுக அதன் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து அவுட்சோர்ஸின், குடிநீர் திறக்கும்  தொழிலாளர்களையும் திட்டத்தையும் தனியாருக்கு தாரை பார்க்கும் செயலை ஈடுபட்டு வரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு
 
அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியாத நிலையில் தனியாருக்கு தாரை பார்க்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறதா எனவும்
 
21 மாநகராட்சி நிர்வாகம் தனியார் மூலமாக தொழிலாளர்களை பணியமறுத்தி வருகின்றனர்  குடிநீர் தொட்டியில் தண்ணீர் திறப்பதற்காக சம்பளமாக ரூ.7,100 வழங்கி வந்த நிலையில் இரவு பகலாக வேலை பார்த்து வந்தனர்
 
1300 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால் அவர்களை மாநகராட்சியில் நிரந்தரபணியில் அமர்த்துங்கள்
 
துப்புரவு தொழிலாளர்களை எண்ணிக்கை அதிகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்யாமல் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியிலேயே தொடர்ந்து கரூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கவுன்சிலர் தண்டபாணி கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்