சென்னை நியாய விலை கடைகளில் பேடிஎம் மூலம் பணவர்த்தனை.. விரைவில் தமிழகம் முழுவதும்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:15 IST)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பேடிஎம் மூலம் பொருட்கள் வாங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கினால் அதற்கு ரொக்கமாக பணம் கொடுத்து வந்த பொதுமக்கள் இனிமேல் பேடிஎம் மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் உள்ள 562 நியாய விலை கடைகளில் சென்னை நகரில் 1500 கடைகளில் பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் உள்ள மீதமுள்ள கடைகள் மற்றும் தமிழக முழுவதும் உள்ள கடைகளுக்கு விரைவில் பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்