டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை.. சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

வெள்ளி, 13 அக்டோபர் 2023 (10:52 IST)
கோயம்பேடு பூ மார்கெட் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
 
சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில்,  மக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பீதி ஆக வேண்டாம் என மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வுக்கு பின் தெரிவித்தார்.
 
நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தி ஆகும். வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் தண்ணீர் சேகரித்து வகைக்கும் ட்ரம், தொட்டி போன்றவற்றை மூடியே வைக்க வேண்டும் என்றும், காய்ச்சல் வந்தால் தாமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.
 
மேலும் 3,317 பணியாளர்கள் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிக்கத் தொடர் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த மாதம் 80 பேருக்கு டெங்கு பாதித்த நிலையில், இம்மாதம் 31 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்