விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல: பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்

Siva
புதன், 15 மே 2024 (15:36 IST)
விழுப்புரம் அருகே உள்ள கிணற்றில் மனித கழிவு கலந்ததாக பொதுமக்கள் புகார் கூறிய நிலையில் அதில் மனித கழிவு கலக்கவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் வேங்கை வயலில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள குடிநீர் கிணற்றில் கலந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

சில மர்ம நபர்கள் மனித கழிவை குடிநீர் கிணற்றில் கலந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிகாரிகள் அந்த கிணற்றை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நிலையில் கிணற்றில் விழுந்து கிடந்தது வெறும் தேனடை என்றும் மனித கழிவு உள்பட வேறு எதுவும் கலக்கவில்லை என்றும் உறுதி செய்தனர்.

மேலும் கிணற்றில் இருந்த நீர் சோதனை செய்யப்பட்டதாகவும் அது முற்றிலும் பாதுகாப்பாக குடிநீருக்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்