தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்து சமைத்தால் கடும் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

Mahendran

புதன், 15 மே 2024 (13:42 IST)
தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
உணவகங்களில் விற்பனை செய்வதற்காக பிடித்துச் செல்லப்பட்ட, தடை செய்யப்பட்ட 800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை குழிதோண்டி உணவு பாதுகாப்பு துறையினர் புதைத்தனர். 
 
ஆப்பிரிக்கன் கெளுத்தி  மீனை உட்கொண்டால் கேன்சர், தோல் நோய்கள், மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது என கூறிய  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்து சமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் என்று சொல்லப்படும் நீர்வாழ் உயிரினம் உணவுச் சங்கலிக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. இந்த வகை மீன்கள் வழுவழுப்பாகவும் நீளமாகவும் இருக்கும் என்றும், அதிகக்கொழுப்புடன் இந்த மீன்கள் இருப்பதால் உணவுக்கு உகந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்