பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

Mahendran

திங்கள், 14 ஏப்ரல் 2025 (10:14 IST)
சீனாவில் பயங்கர சூறாவளி வீசி கொண்டிருப்பதை அடுத்து, 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங் உட்பட சில நகரங்களில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று காரணமாக மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பீஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளன என்றும், வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 50 கிலோ எடைக்கும் குறைவானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என்றும் சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்