48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (07:30 IST)
தமிழகத்திலுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றி இருப்பதாகவும் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் குமரி நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் இந்த இரு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் இருந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்